ஒரத்தநாடு அருகே 15 வயது மகளை வாலிபர் கடத்தி சென்றதாக தந்தை புகார்

ஒரத்தநாடு அருகே இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 பேரையும் தேடி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே சில்லத்தூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது இளம்பெண்ணுக்கும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, காரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் அஜித்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் தந்தை இதுபற்றி ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஒரத்தநாடு போலீசார் கூறியதாவது:-

இளம்பெண்ணின் அக்கா கணவர் மற்றும் அஜித்குமார் இருவரும் நண்பர்கள். இதனால் அடிக்கடி அஜித்குமார் அவர்களது வீட்டிற்கு வந்து சென்ற போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியதாக தெரியவருகிறது என்றனர்.

இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com