தலையில் கல்லை போட்டு மகன் கொலை- தந்தை கைது

மகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நாகமலைபுதுக்கோட்டை:

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள வடிவேல்கரை மேற்கு தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் கதிரவன் (வயது 29). இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் திருமணம் செய்து வைக்கக்கோரி கதிரவன் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதோடு பெற்றோர்களிடம் சண்டையிட்டு தொந்தரவு செய்து வந்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த சாமிநாதன் சம்பவத்தன்று இரவு வடிவேல்கரை நாடக மேடையில் தூங்கிக்கொண்டிருந்த கதிரவன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயம் அடைந்த கதிரவன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார்.

இதுகுறித்து சந்திரசேகர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் சாமிநாதனை கைது செய்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கதிரவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com