திருப்பத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி தந்தை-மகன் பலி

திருப்பத்தூர் அருகே தந்தை- மகன் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலி
பலி
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 38) விவசாயி. இவரது மகன் ஜெகதீசன் (வயது8). 3 வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியில் பாலாஜிக்கும் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள கிணற்றில் நேற்று பாலாஜி, தனது மகன் ஜெகதீசனுக்கு நீச்சல் கற்றுத்தர சென்றுள்ளார்.

அங்கு கிணற்றில் குதித்தபோது ஜெகதீசன் சேற்றில் மாட்டிக்கொண்டான். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெகதீசன் தனது மகனை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்து காப்பாற்ற முன்றுள்ளார்.

அப்போது அவரும் சேற்றில் சிக்கிக்கொண்டார். இதனால் தந்தை- மகன் இருவரும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று இருவரையும் மீட்டு மேலே கொண்டுவந்தனர். அதற்குள் அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர்.

இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை- மகன் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com