கெலமங்கலம் அருகே விவசாயி தற்கொலை

கெலமங்கலம் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ராயக்கோட்டை:

கெலமங்கலத்தை அடுத்த தொட்டபேளூர் ஊராட்சி குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதையடுத்து அவரிடம் குடும்பத்தில் உள்ளவர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்த சொல்லி வற்புறுத்தியதால் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். 

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிமருந்து குடித்து விட்டார். இதையடுத்து அவருக்கு கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தனியார் மருத்துவமனையிலும் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணன் கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் கமலேசன் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com