சுரண்டை அருகே விபத்தில் காயம் அடைந்த விவசாயி பலி

சுரண்டை அருகே விபத்தில் காயம் அடைந்த விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சுரண்டை:

சுரண்டை அருகே உள்ள வீராணத்தை சேர்ந்தவர் பூலியப்பன் (வயது 58). விவசாயியான இவர் கடந்த 22-ந் தேதி நாச்சியார்புரத்தில் இருந்து வீராணம் நோக்கி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஊத்துமலை விலக்கு அருகே வந்தபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து பூலியப்பன் கீழே விழுந்து, படுகாயம் அடைந்தார். 

அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பூலியப்பன் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காஜாமைதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com