சங்கரன்கோவில் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் கைது

சங்கரன்கோவில் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலை அடுத்த சங்குபுரத்தை சேர்ந்தவர் சிங்கதுரை (வயது 25). இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் அப்பகுதியில் உள்ளது.

சம்பவத்தன்று சிங்கதுரை, தனது தோட்டத்தில் வேலை செய்யும் ஆட்களை அழைத்து வர மினி வேனில் சென்றுள்ளார். கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள பனையூர் பகுதியில் சென்றபோது அந்த ஊரை சேர்ந்த பிரமோத், மதன் குமார், மகேந்திரன், ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த இசக்கி ஆகிய 4 பேர் சிங்கதுரையை வழிமறித்துள்ளனர்.

அவரிடம் தகராறில் ஈடுபட்ட 4 பேரும் அரிவாள் மற்றும் கம்பியால் சிங்க துரையை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிங்கதுரையை அங்கிருந்தவர்கள மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகராறில் ஈடுபட்ட பிரமோத் மற்றும் இசக்கியை கைது செய்தனர்.

தலைமறைவான மதன் குமார் மற்றும் மகேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பனையூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com