வேளாண் சட்டங்களால் அதிருப்தி - பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறாததால் அதிருப்தி அடைந்த பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி மகனுடன் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

அமிர்தசரஸ்:

பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜக்தார் சிங் (வயது 70). இவரது மகன் கிர்பால் சிங் (42). விவசாயியான ஜக்தார் சிங்கும், கிர்பால் சிங்கும் தங்கள் வீட்டில் நேற்று இறந்து கிடந்தனர். அவர்கள் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

அதில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறாததால் மன உளைச்சலில் இருந்ததாகவும், மாநில காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிப்படி விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.

கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை எடுத்திருப்பதாகவும் அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். ஜக்தார் சிங்குக்கு ஏராளமான விவசாயக்கடன்கள் இருந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com