

திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் ரெயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த தேன்மொழி என்ற ஷீபா (வயது 30) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து தேன்மொழி தனது பெற்றோரிடம் இதுதொடர்பாக கூறி அழுது புலம்பி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த தேன்மொழி தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.