இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
போட்டி நடைபெறும் மைதானம்
போட்டி நடைபெறும் மைதானம்
Published on

ஆமதாபாத்:

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதலாவது டெஸ்டில் இ்ங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இ்ந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் மோடேராவில் உள்ள நரேந்திர மோடி  ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு ஆட்டமாக தொடங்கியது. 

டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக பிங்க் நிற பந்தை இந்திய அணி வீசுகிறது. 

இந்திய அணியில் சிராஜ், குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், பும்ரா சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com