அன்னூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

அன்னூர் அருகே காதலை ஏற்க இளம்பெண் மறுத்ததால் மனவேதனை அடைந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவை:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம் புதூரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் பிரசாந்த் (வயது 21). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

பிரசாந்த் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை அந்த இளம்பெண்ணை சந்தித்து பலமுறை எடுத்து கூறியும் அவர் காதலை ஏற்க மறுத்து விட்டார்.

இதனால் பிரசாந்த் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்துவது என முடிவு செய்தார். அதன்படி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com