தஞ்சையில் என்ஜினீயர் தற்கொலை- போலீசார் விசாரணை

தஞ்சையில் வி‌ஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
Published on

தஞ்சை:

தஞ்சை மேலவீதி சின்ன பையான் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவரது மகன் கோபிநாத் (வயது30). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு தற்போது வீட்டிலேயே புரோகிராம் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கோபிநாத் யாரிடமும் சரிவர பேசாமல் சோகமாகவே தனிமையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (வி‌ஷம்) வாங்கி குடித்துவிட்டு வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோபிநாத் இறந்துவிட்டார்.

இதுகுறித்து அவரது தந்தை ராஜேஷ்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து என்ன காரணத்துக்காக கோபிநாத் தற்கொலை செய்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com