தஞ்சையில் மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி

தஞ்சையில் மோட்டார் சைக்கிளுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்த மெக்கானிக்கை மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை வடக்கு வாசல் கங்காநகரை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 36). மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் மோட்டார் சைக்கிளுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது தரையில் கிடைந்த சேதமடைந்த மின்ஒயரில் மிதித்துள்ளார். எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட லட்சுமணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லட்சுமணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com