ஆண்டிபட்டி அருகே மனைவி பிரிந்த ஏக்கத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனஉளைச்சலுக்கு ஆளான எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே வைகை அணை முதலக்கம்பட்டியை சேர்ந்தவர் நாராயணன் மகன் நடேசன்(25). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இவரது மனைவி கோபித்துக்கொண்டு பெரியகுளத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் மனஉளைச்சலுக்கு ஆளான நடேசன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வைகை அணை போலீசார் விரைந்து வந்து நடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சுசிலா(65). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகன் முருகனுடன் வசித்து வந்தனர். முருகனின் மனைவி வனிதாவுக்கும், சுசிலாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் வனிதா கோபித்துக்கொண்டு மதுரைக்கு சென்று விட்டார்.

தன்னால் தனது மகன் வாழ்க்கை பாதிக்கப்பட்டது என மனஉளைச்சலில் இருந்த சுசிலா வி‌ஷம் குடித்து மயங்கினார். அவரை தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com