விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி

அரக்கோணம் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாக்யராஜ்-அருண்குமார்
பாக்யராஜ்-அருண்குமார்
Published on

நெமிலி:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 37 )விவசாயி. இவருடைய மகன் அருண்குமார்(14) அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்களுக்கு சொந்தமாக ராணிப்பேட்டை மாவட்டம் கஞ்சாம்பட்டு கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. அதனருகே இவரது உறவினர் செல்வம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. செல்வம் அவர்கள் நிலத்தில் காட்டுப்பன்றி மற்றும் எலி தொல்லையைக் கட்டுப்படுத்த மின்வேலி அமைத்து இருந்தார்.

இன்று காலையில் பாக்யராஜ், அருண்குமார் இருவரும் கஞ்சாம்பட்டு விவசாய நிலம் அருகே உள்ள கால்வாயில் மீன்பிடிக்கச் சென்றனர்.

செல்வத்தின் நிலத்தின் வழியாக சென்றபோது அங்கு காட்டு பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியில் இருவரும் சிக்கினர்‌. இதில் மின்சாரம் தாக்கி பாக்யராஜ், அருண்குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com