சரவணம்பட்டியில் தீக்குளித்து முதியவர் தற்கொலை

சரவணம்பட்டியில் மனைவி இறந்துவிட்ட நிலையில் தன்னை கவனிக்க ஆள் இல்லாததால் முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

சரவணம்பட்டி:

சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 73). இவருடைய மனைவி இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். முத்துச்சாமி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் தன்னை கவனிக்க யாரும் இல்லாததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்துச்சாமி, தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்களுக்கு தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சரவணம்பட்டி போலீசார் மற்றும் கணபதி தீயணைப்பு படையினர் தீயை அணைத்து, முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com