வளவனூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

வளவனூர் அருகே நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

வளவனூர்:

வளவனூர் அருகே கெங்கராம்பாளையத்தில் உள்ள ஓட்டல் அருகே சுமார் 70 வயதுடைய முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அந்த முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. 

இந்த விபத்தில் அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com