கரிக்கலாம்பாக்கம் அருகே நெல் அறுவடை எந்திரம் மோதி முதியவர் பலி

கரிக்கலாம்பாக்கம் அருகே நெல் அறுவடை எந்திரம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

புதுச்சேரி:

கரிக்கலாம்பாக்கம் அருகே தனத்துமேடு மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் சிவக்கொழுந்து (வயது67). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு திலகவதி என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு சிவக்கொழுந்து வயல்வெளிக்கு சென்று நண்டு பிடித்து வருவதாக குடும்பத்தினரிடம் கூறி சென்றார். ஆனால், இரவு வெகுநேரம் ஆகியும் சிவக்கொழுந்து வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வயல்வெளிக்கு சென்று பார்த்த போது சிவக்கொழுந்து பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அப்பகுதியில் நெல் அறுவடை செய்யும் எந்திரம் மோதி சிவக்கொழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது மகன் ஜனார்த்தனன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com