திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த முதியவர் பலி

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூர் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் பாளைய்யன் (வயது 73). இவர் நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் இருந்து திருவள்ளூரை அடுத்த தலக்காஞ்சேரியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார்.

அவர் தலக்காஞ்சேரி பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் இறங்கினார்.

எதிர்பாராதவிதமாக கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்தார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருஷ்ணா கால்வாயில் அடித்து செல்லப்பட்டு இறந்துபோன பாளைய்யனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com