டிராக்டரில் ஏற்றி வந்த செங்கல் சரிந்து முதியவர் பலி

ராமநாதபுரம் அருகே டிராக்டரில் ஏற்றி வந்த செங்கல் சரிந்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள கவரங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது68). இவர் பனைக்குளம் கிழக்குத் தெருவில் சுவர் ஓரத்தில் நின்று கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்ற டிராக்டரை பின் நோக்கி எடுக்கும்போது காளிமுத்தன் மீது மோதியது. அதில் இருந்த செங்கல் சரிந்து காளிமுத்தன் மீது விழுந்து சுவருடன் சிக்கி கொண்டார்.

அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com