பாவூர்சத்திரம் அருகே முதியவர் தற்கொலை

பாவூர்சத்திரம் அருகே வீட்டில் இருந்த முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழ அரியப்பபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 70). இவர் சொந்தமாக பசு மாடு வளர்த்து வந்துள்ளார். இதனை அவரது வீட்டில் உள்ள மனைவி மற்றும் மகன்கள் தடுத்து வந்துள்ளனர். இதனால் மன வருத்தத்துடன் இருந்து வந்த தங்கப்பாண்டி, கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். 

ஆபத்தான நிலையில் அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தங்கப்பாண்டி நேற்று முன்தினம் இறந்தார். 

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com