பழனி அருகே லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது

பழனி அருகே லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் கைது
முதியவர் கைது
Published on

பழனி:

பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பூங்கா ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற பழனி குரும்பபட்டியை சேர்ந்த செல்வம் (வயது 63) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.3 ஆயிரத்து 500 மற்றும் 51 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com