கோவையில் கல்லுக்குழியில் மூழ்கி கூரியர் நிறுவன ஊழியர் பலி

கோவையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற கூரியர் நிறுவன ஊழியர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கோவை:

சென்னை தேனாம் பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவர் கோவை ராமநாதபுரத்தில் தங்கி கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் பெரியகுழிப் பகுதியில் உள்ள குவாரிக்கு சென்றார்.

அங்கு அவர் நண்பர்களுடன் சேர்ந்து கல்லுக்குழியில் குளித்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் தத்தளித்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர் அதற்குள் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com