திருச்சிற்றம்பலத்தில் தீக்குளித்து டிரைவர் தற்கொலை

குடும்ப தகராறில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). தனியார் கல்லூரி ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் , வீட்டிலிருந்த மண்எண்ணெய்யை தனது உடலில்ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். மணிகண்டனுக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com