வாணியம்பாடியில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

வாணியம்பாடியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
Published on

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 30-வது வார்டு மில்லத் நகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்குவதாகவும், அப்போது 2 குடங்கள் மட்டுமே தண்ணீர் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டால் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறி நேற்று 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நேத்தாஜிநகர் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com