பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டம்

தஞ்சாவூர் அருகே பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டத்தை கண்டித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை வண்டிக்கார தெரு மற்றும் ஒரத்தநாடு தாலுகா சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் விபத்தில் காயமடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் அவர்களது உறவினர்கள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது காயமடைந்த வாலிபர்களின் உறவினர்களுக்கும் பயிற்சி டாக்டருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே சிலர் டாக்டரை நாற்காலியை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்தும் டாக்டரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் மருத்துவமனைக்கு விரைந்து சென்று டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைதொடர்ந்து போராட்டத்தை டாக்டர்கள் கைவிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com