பணம் கேட்டு மிரட்டியதால் டாக்டர் தூக்குபோட்டு தற்கொலை

பெரியகுளத்தில் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்த சம்பவத்தால் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
டாக்டர் தற்கொலை
டாக்டர் தற்கொலை
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). இவர் கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் ஹோமியோபதி கிளீனிக் நடத்தி வந்தார். முறையான பதிவு பெற்று அந்த பகுதியில் சிறந்த சேவையாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மாவட்ட குடும்ப நல மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனரான டாக்டர் லெட்சுமணனிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். 

அதனை கொடுக்கவில்லை என்றும் பணத்தை கேட்டு லட்சுமணன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் சீனிவாசன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சாந்தி பெரியகுளம் டி.எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தார். 

அதில் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்ததால்தான் எனது கணவர் இறந்து விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் இணை இயக்குனரை கைது செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்ததால் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com