மனைவியுடன் தகராறு: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

குழந்தையை அடித்த மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

அண்ணாமலை:

சிதம்பரம் அண்ணாமலை நகர் சந்திரமலை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் துரை(வயது 24). இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த 5-ந் தேதி இரவு துரை வீட்டில் இருந்தார். அப்போது அவரது குழந்தை தின்பண்டத்தை கீழே இறைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சரண்யா, குழந்தையை அடித்துள்ளார். இதை துரை கண்டித்ததால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தது.

இதனால் மனமுடைந்த துரை, சேலையால் வீட்டின் உத்தரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரண்யா மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துரை நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆறுமுகம், அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com