மனைவியுடன் தகராறு: தூக்குப்போட்டு டெய்லர் தற்கொலை

புதுவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி நைனியப்பா பிள்ளை வீதியை சேர்ந்தவர் மன்சூர் அகமது (வயது 40). இவரது மனைவி மரியம்பீபி. குவைத்தில் வேலை செய்து வந்த மன்சூர் அகமது, கடந்த ஆண்டு புதுவை திரும்பினார். இங்குள்ள டெய்லர் கடையில் வேலை செய்து வந்தார். மன்சூர் அகமது அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்ட மரியம்பீபி, தனது குழந்தைகளுடன் பாகூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த மன்சூர் அகமது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com