நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
Published on

நெல்லை:

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வ சுந்தரி தலைமை தாங்கினார். துணை தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் குமாரசாமி, இணை செயலாளர் கற்பகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சிறப்பு ரெயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை கட்டணம், மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பெட்டிகள் அமைக்க வேண்டும். ரெயில் நிலையங்களில் உள்ள நகரும் படிக்கட்டுகளை இயக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அவர்களை அழைத்து வரும் உதவியாளர்களுக்கு பிளாட்பாரம் டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும்.

புதுச்சேரி, சண்டிகர் போன்ற யூனியன் பிரதேசங்களில் உள்ளது போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் அகஸ்தியராஜன், சங்கர சுப்பு, முத்து மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com