திண்டுக்கல் அருகே மது, புகையிலை விற்ற 3 பேர் கைது

திண்டுக்கல் அருகே மது, புகையிலை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், விஜய் ஆகியோர் தலைமையிலான போலீசார் குட்டத்து ஆவாரம்பட்டி, சிறுமலை பிரிவு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மதுபானம் விற்ற குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்த ஜான்தாஸ் (வயது 44), அடியனூத்து அகதிகள் முகாமை சேர்ந்த ராசையா (55) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்ற திருமலைநகரை சேர்ந்த கவுதம் கிஷோர்குமார் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com