

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சூசைபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது
விற்ற அதே பகுதியை சேர்ந்த மரியலோபா (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் பெரும்பாறையை சேர்ந்த மூனுசாமி (52) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்வதாக தாண்டிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா தலைமையிலான போலீசார் அவர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 16 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூனுசாமியை கைது செய்தனர்.