ஆன்லைன் முறையில் பாடங்கள் கற்பதற்கு சிரமப்படும் நிலை - அரசு உரிய வழிகாட்டல் வழங்க கோரிக்கை

கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் கற்பித்தலால் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் பாதிப்பை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை உரிய வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ஆன்லைன் கல்வி
ஆன்லைன் கல்வி
Published on

விருதுநகர்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை கல்வி நிறுவனங்களை ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இதற்காக கல்வி டி.வி. என்ற தொலைக்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் கிராமங்களிலேயே வசித்து வருகின்றனர். இவர்களால் பல்வேறு காரணங்களால் ஆன்லைன் கற்பித்தல் முறையை பின்பற்ற முடியாத நிலையில் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இணையதள வசதிகள் சரிவர கிடைக்காத நிலையில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தும் போது முழுமையாக அதனை பார்க்கவோ, கேட்கவோ முடியாத நிலையில் கிராமப்புற மாணவர்கள் உள்ளனர்,

இதனால் அவர்களது கற்றல் பாதிக்கப்படுகிறது. மேலும் ஏழை, எளிய பெற்றோரால் கிராமங்களில் உள்ள அவர்களது குழந்தைகளுக்கு தேவையான நவீன வசதிகளை செய்து தர முடிவதில்லை. இதனாலும் ஆன்லைனில் கிராமப்புற மாணவர்கள் பாடங்களை கற்பதற்கு முடியாத நிலை தொடர்கிறது. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் அரசு பள்ளி மாணவர்கள் தான்.

எனவே பள்ளிக்கல்வித்துறையும், உயர்கல்வித்துறையும் கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் முறையில் பாடங்களை கற்பதற்கு முறையான வழிகாட்டல்களை மாவட்ட கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்வதற்கு தமிழக அரசு உரிய வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இல்லையேல் கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com