செங்கல்பட்டு அருகே மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

உத்திரமேரூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மேல் மணப்பாக்கம் மேலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 55). இவர், தனது நண்பர் சுந்தரத்துடன் உத்திரமேரூர் அடுத்த பழைய சீவரம் என்ற இடத்தில் வைக்கோல் வாங்கி மாட்டு வண்டியில் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது திடீரென பாபு மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக பலியானார்.

இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com