விகே சிங் சகோதரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வைரலாகும் தகவல்

கொரோனா பாதித்தவருக்கு உதவி கேட்டு விகே சிங் பதிவிட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
விகே சிங்
விகே சிங்
Published on

இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு தினசரி எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் ராணுவ தலைவர் விகே சிங் பதிவிட்டதாக கூறும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

வைரல் ட்விட்டர் பதிவில், `கொரோனாவைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட எனது சகோதரருக்கு படுக்கை தேவைப்படுகிறது. காசியாபாத் மருத்துவமனைகள் எதிலும் படுக்கை கிடைக்கவில்லை.  தயவு செய்து உதவுங்கள்' என எழுதப்பட்டு இருக்கிறது. 

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், விகே சிங் தனது சொந்த சகோதரருக்காக அந்த பதிவை மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ட்விட்டரில் அந்த பதிவு மற்றொரு நபருக்காக பதிவிடப்பட்டு இருக்கிறது. இதே தகவலை விகே சிங் மற்றொரு ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com