16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தினருடன் தர்ணா

நெல்லை அருகே 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நெல்லை:

டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக வண்ணார்பேட்டையில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு, விற்பனை நேரம் குறைப்பு என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

கூட்டு நடவடிக்கைக்குழு செயலாளர் சரவண பெருமாள் தலைமை தாங்கினார். தொ.மு.ச. துணைச்செயலாளர் பால கிருஷ்ணன் வரவேற்றார்.

தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மோகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சடையப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

போராட்டத்தில் நிர்வாகிகள் சந்திரன், சிவன்ராஜ், சாஸ்தா, ஜெய்கணேஷ், கைக்கொண்டான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com