தர்மபுரி அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி

தர்மபுரி அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
மோசடி
மோசடி
Published on

தர்மபுரி:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன். இவர் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் எனது மருமகன் உள்ளிட்ட 5 பேருக்கு அரசு துறையில் சென்னை மெட்ரோ வாட்டர் பிரிவில் உதவி என்ஜினீயர் வேலை வாங்கித் தருவதாக கூறி அரூரை சேர்ந்த ஒரு தம்பதி ரூ.60 லட்சம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி எங்களுடைய பணத்தை மீட்டுத்தர வேண்டும். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com