தர்மபுரியில் லாரி டிரைவர் தற்கொலை

தர்மபுரியில் லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

தர்மபுரி:

தர்மபுரியை சேர்ந்தவர் அருணகிரி (வயது 40). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அருணகிரி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருணகிரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com