தர்மபுரி மாவட்டத்தில் கள் விற்ற 10 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் கள் விற்ற 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமாருக்கு புகார்கள் வந்தது. இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தர்மபுரி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் மற்றும் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு பகுதிகளில் கள் விற்பனை செய்து கொண்டிருந்த வெங்கடேசன் (வயது 46), ஆண்டியப்பன் (50), சக்தி (39), சின்னு (53), முருகேசன் (46), சம்பு (48), கோவிந்தராஜ் (45), செம்மலை (48), கோவிந்தன் (43), முத்து (48) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com