தர்மபுரி மாவட்டத்தில் மது விற்ற 15 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் மது விற்ற 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக மாவட்டம் முழுவதும் 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com