பத்திரிகையாளர்களுக்கு இ-பதிவு தேவையில்லை- டிஜிபி திரிபாதி அறிவிப்பு

மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் வாகனங்களில் செல்ல இ-பதிவு தேவையில்லை என்று அரசு அறிவித்து இருந்தது.
டிஜிபி திரிபாதி
டிஜிபி திரிபாதி
Published on

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், மாவட்டங்களுக்குள் பயணிக்கவும் இ-பதிவு அவசியம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் பத்திரிகையாளர்கள், அவர்களுடைய அலுவலக அடையாள அட்டை, தமிழக அரசின் அடையாள அட்டை, பிரஸ் கிளப் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பயணம் செய்துகொள்ளலாம். இ-பதிவு தேவையில்லை’ என்று அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com