குடவாசல் அருகே கோவிலுக்கு வந்த பக்தர், குளத்தில் மூழ்கி பலி

குடவாசல் அருகே கோவிலுக்கு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த பக்தர், குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

குடவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம் சமத்துவபுரம் உப்பு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது40). இவர் நேற்று முன்தினம் செல்லூர் அங்காளம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் அங்குள்ள குளத்தில் இறங்கி குளித்தார். குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் ரவிச்சந்திரன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பொன்னிவளவன் குடவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் குடவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவிச்சந்திரன் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com