கேரளாவில் தமிழில் மீண்டும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட தேவிகுளம் எம்.எல்.ஏ.

பொதுவாக பதவி பிரமாணம் செய்து கொள்ளும் போது, எம்.எல்.ஏ.க்கள் கடவுளின் நாமத்தில், அல்லது அல்லாவின் நாமத்தில் அல்லது உளமார உறுதி கூறுகிறேன் என முடிப்பது சட்டசபை மரபு.
தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா
தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா
Published on

கேரள சட்டசபை தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடந்த மாதம் 24-ந் தேதி எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று கொண்டனர். அப்போது, தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா, தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்.

பொதுவாக பதவி பிரமாணம் செய்து கொள்ளும் போது, எம்.எல்.ஏ.க்கள் கடவுளின் நாமத்தில், அல்லது அல்லாவின் நாமத்தில் அல்லது உளமார உறுதி கூறுகிறேன் என முடிப்பது சட்டசபை மரபு. ஆனால் தமிழில் பதவி பிரமாணம் செய்து கொண்ட தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா அவ்வாறு நிறைவு செய்யவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com