தேவகோட்டை அருகே சுவர் இடிந்து விழுந்து விவசாயி பலி

தேவகோட்டை அருகேசுவர் இடிந்து விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

தேவகோட்டை:

தேவகோட்டை அருகே அனுக்கானேந்தல் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர் கோட்டைச்சாமி (வயது 60).விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.தொடர் மழையால் வீட்டின் பக்கவாட்டு மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து திருவேகம்பத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தேவகோட்டை தாசில்தார் சேகர் சம்பவ இடத்தை பார்வையிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com