கட்டாய பணி இடமாறுதலை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் காட்பாடி தாலுகா அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் கட்டாய பணி இடமாற்றத்தை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வேலூர்:

வேலூர் காட்பாடி தாலுகா அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் கட்டாய பணி இடமாற்றத்தை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு காட்பாடி வட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் அன்பரசன் செயலாளர் வெங்கடேசன் வட்ட துணைத் தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காட்பாடி கோட்டத்தில் உள்ள 4 கிராம நிர்வாக அலுவலர்கள் குடியாத்தம் கோட்டத்திற்கு கட்டாய பணி இடம் மாற்றம் செய்த மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் விநாயகம் காட்பாடி கிராம நிர்வாக அலுவலர் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com