வாணியம்பாடி அருகே வழியில் கிடந்த மோதிரத்தை போலீசில் ஒப்படைத்த வியாபாரி

வாணியம்பாடி அருகே வழியில் கிடந்த 4 கிராம் எடையுள்ள மோதிரத்தை எடுத்த வியாபாரி, அதை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை பாராட்டினர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

வாணியம்பாடி:

வாணியம்பாடியை அடுத்த பள்ளிப்பட்டு கூட்ரோடு பகுதியில் ராஜாமணி என்பவர் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை கடையை திறப்பதற்காக நடந்து சென்றார். அப்போது பஜார் வீதியில் உள்ள ஒரு கடையின் அருகில் ஒரு மோதிரம் கிடந்ததை கண்டார். அதை கையில் எடுத்து பார்த்தபோது 4 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி உத்தரவின் பேரில் அங்கு வந்த போலீசார் மோதிரத்தை பெற்றுக்கொண்டு, ராஜாமணியை பாராட்டி சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com