மகள் காதல் திருமணம் செய்ததால் விஷம் குடித்து பெண் தற்கொலை

தேவதானப்பட்டி அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகேயுள்ள சிந்துவம்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி ஆதிபராசக்தி (வயது 46). இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் உள்ளார். இவர் நாமக்கல்லில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பவித்ரா காதல் திருமணம் செய்தார். இதனால் மனமுடைந்த ஆதிபராசக்தி நேற்று வீட்டில் விஷம் குடித்தார். இதில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆதிபராசக்தி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com