செங்கல்பட்டு அருகே சைக்கிள் மீது பஸ் மோதல்- காவலாளி பலி

செங்கல்பட்டு அருகே சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த காவலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து
விபத்து
Published on

படப்பை:

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமம் பழண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார், (வயது 50) இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து அவருடைய சைக்கிளில் ஒரகடம் வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜெயக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் இறந்து கிடந்த ஜெயகுமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com