சமயபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி.
திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி.
Published on

சமயபுரம்:

துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி செட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமராஜின் மகன் ஜீவா (வயது 21). இவர் பொக்லைன் எந்திர டிரைவர். சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர்பாளையம் நடுதெருவை சேர்ந்த சின்னத்துரையின் மகள் பாக்கியலட்சுமி (19). இவர்கள் இருவருக்கும் திருச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்த போது பழக்கம் ஏற்பட்டது. 

அதுநாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கே நம்மை பிரித்து விடுவார்களோ என்று பயந்த இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து இருவரும் பாதுகாப்பு கேட்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார், இருவரின் பெற்றோரையும் அழைத்து சமரசம் செய்து, அவர்களுடன் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com