சேந்தமங்கலத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

சேந்தமங்கலத்தில் காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள மேற்கு ஜங்களாபுரத்தை சேர்ந்தவர் மணி (வயது 22). கூலித்தொழிலாளி. இவரும் நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரத்தை சேர்ந்த உறவுக்கார பெண்ணான நந்தினி (20) என்பவரும் கடந்த சில ஆணடுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதாக தெரிகிறது.

இதனால் காதலர்கள் இருவரும் பவானியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு சேந்தமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் காதலர்களின் பெற்றோரை அழைத்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதில் பெண்ணின் குடும்பத்தினர் அவர்களது திருமணத்தை ஏற்று கொள்ள மறுத்து விட்டார்களாம். இதையடுத்து பெண்ணின் விருப்பப்படி அவரது காதல் கணவரான மணியின் குடும்பத்தினருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று போலீஸ் நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com