கந்தம்பாளையத்தில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

கந்தம்பாளையத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
காதல் ஜோடி  தஞ்சம்
காதல் ஜோடி தஞ்சம்
Published on

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள ராம தேவம் வடுகபாளையம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவருடைய மகன் பிரவீன் (வயது 20). இவர் மோட்டார் வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். 

கரூர் பள்ளி மருதம்பட்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ் என்பவரின் மகள் சந்தியா (20). இவர் வேலூரில் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், பிரவீனும், சந்தியாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 19-ந் தேதி எலச்சிபாளையம் இலுப்புலி ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இந்த காதல் திருமணம் செய்த ஜோடி நேற்று நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். 

மேலும் இதுகுறித்து நல்லூர் போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com